இந்தியா-அமெரிக்கா உறவு அடுத்த ஆண்டு மேலும் வலுவடையும்: வெள்ளை மாளிகை தகவல்

இந்தியாவும், பிரதமர் மோடியும், அமெரிக்காவிற்கு உதவக்கூடிய முக்கிய கூட்டாளிகள். பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது: இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022 ஆண்டு முக்கியமானது.

அடுத்த ஆண்டு இரு நாடுகளிடையேயான உறவு இன்னும் வலுவடையும். ​சர்வதேச அளவிலான பிரச்சினைகளில் ​அமெரிக்காவிற்கும், அதன் அதிபர் ஜோபைடனுக்கும் உண்மையிலேயே உதவக்கூடிய கூட்டாளிகளை உலகம் முழுவதும் தேடும் போது அந்த பட்டியலில் இந்தியாவும், பிரதமர் மோடியும் முக்கிய இடத்தை பெறுகின்றனர்.

ஜி-20 உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் நாங்கள் இதை பார்த்தோம்., அணுசக்தி பிரச்சினைகள் தொடர்பாக அதிகரித்து வரும் ஆபத்தை இந்திய அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும், அதிபர் பிடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர், சமீபத்தியது சந்திப்பு கடந்த வாரம் பாலியில் நடந்துள்ளது. குவாட் உச்சி மாநாடு அடுத்து நடைபெற உள்ளது.

தொடர்ந்து ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா வகிக்க உள்ளது. அதை நாங்கள் அனைவரும் எதிர்நோக்குகிறோம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு மிக முக்கிய ஆண்டாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

-mm