கேரளாவில் ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதித்த பன்றிகள் அழிப்பு- சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி

கரிமன்னூர், வண்ணப்புரம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. பண்ணைகளில் இருந்து பன்றிகள் எங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்த தகவல்களை சேகரிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கேரளாவில் மலையோர மாவட்டங்களில் அடிக்கடி பறவை காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் கரிமன்னூர், வண்ணப்புரம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கால்நடை துறை அதிகாரகள் மற்றும் சுகாதார துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் பன்றிகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து கரிமன்னூர், வண்ணப்புரம் பகுதிகளில் உள்ள 2 பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 50 பன்றிகளை உடனடியாக அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.நேற்று இந்த பன்றிகள் சுகாதார துறை ஊழியர்களால் அழிக்கப்பட்டன. மேலும் இந்த பண்ணைகளில் இருந்து பன்றிகள் எங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்த தகவல்களை சேகரிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 

-mm