மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி தகவல் போர் நடத்துவதாக ரஷியா குற்றச்சாட்டு

ஆவணப்படத்தை பகிர்வதை தடுக்கும்படி சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது.

குஜராத் கலவரத்தில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தியும் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆவணப்படத்தை இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனினும் தடையை மீறி ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மரியா சகரோவா, சுதந்திரமான கொள்கைகளை கொண்டுள்ள ரஷியா மட்டுமின்றி சக்திவாய்ந்த பிற உலக நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் இது.

சில ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து அரசாங்கத்துடனும் பிபிசி சண்டையிட்டது என்பது தெரியவந்தது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. பிபிசி-க்கு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டும்’ என்றார்.

 

-mm