தற்சார்பு இந்தியா உருவாக பிரதமர் மோடி திட்டவட்டம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல், நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் உள்நாட்டில் தயாரிக்கும் திட்டங்களுக்கும், மேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கும் சான்றாக உள்ளது.

இந்த கப்பலில் போர் விமானங்களை தரையிறக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கள் கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட் டது. எல்சிஏவிமானத்தை இந்திய கடற்படையின் கமடோர் சிவநாத் தஹியா,ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கி, மீண்டும் புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி கூறும்போது, ‘‘ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் மிக் – 29 கே மற்றும் எல்சிஏ விமானங்கள் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியா நோக்கிய முயற்சிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன’’ என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரித்து, அதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்விமானத்தை இந்தியா தரையிறக்கியுள்ளது. இது குறித்து கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.என் கார்மேட் கூறும்போது, ‘‘பாதுகாப்புத்துறையின் மேக் இன் இந்தியா திட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை. இது உள்நாட்டு மயமாக்கலை ஊக்குவிக்கும்’’ என கூறியுள்ளார்.

 

 

-th