அசாம் அரசுக்கு லியனார்டோ டிகாப்ரியோ பாராட்டு

பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியா. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தொடங்கியுள்ள அறக்கட்டளை மூலம், அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாக்கச் செலவு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அசாம் அரசை பாராட்டியுள்ளார். அங்கு அரியவகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், கொம்புகளுக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டு வந்தன. இப்போது அது தடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் பாராட்டியுள்ளார்.

இதுபற்றி லியனார்டோ டிகாப்ரியோ கூறும்போது, “அசாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு காப்பகத்தில் 2000-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுமார் 190 ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டன. இப்போது அம்மாநில அரசு அதை முடிவுக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காசிரங்கா தேசிய பூங்காவை வந்து பார்வையிடுமாறு டிகாப்ரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

-FMT