திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. அவரின் நினைவாக பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் இயக்கிய ‘விகதகுமாரன்’ என்ற படத்தில் முதல் கதாநாயகி இவர்தான். இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும் எதிர்ப்பை அவர் சந்தித்தார். ஏனெனில் அக்காலத்தில் சாதிய ரீதியாக கடும் அடக்குமுறை இருந்தது.
பி.கே.ரோசி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அப்படிப்பட்ட ஒரு பெண் நாயர் குடும்ப பெண்ணாக நடிப்பதா? என கேரள மாநிலத்தில் கடும் எதிப்புகள் எழுந்தன. இதனால் பி.கே.ரோசி கேசவபிள்ளை என்ற லாரி டிரைவரை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு குடிபெயர்ந்தார்.
பின்னர் 1988-ம் ஆண்டு அவர் இறந்தார். அவரின் நினைவாக பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பெண்களால் நடத்தப்படும் இந்த அமைப்பு, பெண் படைப்பாளிகளையும், பெண் திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியை செய்து வருகிறது. மலையான திரையுலகின் முதல் கதாநாயகி பி.கே.ரோசியின் 120-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்டுள்ளது. “உங்களுடைய தைரியத்துக்கும், விட்டு சென்ற மரபுகளுக்கும் நன்றி பி.கே.ரோசி” என கூகுள் குறிப்பிட்டுள்ளது.
-mm