இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: மாநில திட்டக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரை

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னார்வலர்கள், 362 தலைமை ஆசிரியர்கள், 362 ஆசிரியர்கள், 724 பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடர்பாக பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மையங்களுக்கு சென்றபின் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் அதிகரித்துள்ளது. வீட்டு வேலைகளிலும் உதவிகள் செய்வதுடன், செல்போன் பயன்பாடும் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். பாடப்புத்தகங்களை தாண்டி வெளி நிகழ்வுகள் குறித்து படிக்கவும் மாணவர்களுக்கு ஆர்வம் வந்துள்ளது.

இல்லம் தேடி மையங்களின் எளிய கற்றல் வழிமுறைகள மாணவர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் மாணவர் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர். இவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் சிறந்த இந்த இல்லம் தேடி கல்வி மைய திட்டத்தை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. இல்லம் தேடி கல்வி மையம் மாணவர்களுக்கான கற் றல் இழப்பை சரிசெய்வதற்கான பாலமாக செயல்பட்டுள்ளது. இதை ஒரு சமூக இயக்கமாக மாற்றவேண்டியது அவசியம். கடந்த ஓராண்டில் இந்த திட்டம் உருவாக்கிய மாற்றம் மிகப் பெரியது. அது தொடர்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

 

-th