பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடக்கம்

பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் சர்வதேச விமான கண்காட்சியில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன போர் விமானங்கள் பங்கேற்க இருக்கிறது.

விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் கண்காட்சியில் அதிக அளவில் இடம் பெறுகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்திருக்கும் அதிநவீன விமானங்கள், ஹெலிகாப்டர்களும் விமான கண்காட்சியில் பங்கேற்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்.ஏ.எல். நிறுவன தயாரிப்புகள் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள சூப்பர் சோனிக் டிரெய்னர் (எச்.எல்.எப்.டி.42) என்ற விமானம் முதல் முறையாக விமான கண்காட்சியில் இடம் பெறுகிறது. இது முழு பயிற்சி திறன்களையும், நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டதாகும். மேலும் ஆத்மநர்பார் பார்மேசன் படி 15 இலகுரக ஹெலிகாப்டர்களும் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

அட்வான்ஸ் இலகுரக ஹெலிகாப்டரான பிரசாந்த் விமான கண்காட்சியில் பங்கேற்பது தனிச்சிறப்பு என்று எச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல், எச்.ஏ.எல். நிறுவனத்தின் தயாரிப்பான எல்.சி.ஏ.எம்.கே.2, ஹிந்துஸ்தான் டர்போசாப்ட் என்ஜின் 1,200, ஆர்.யூ.ஏ.வி, எல்.சி.ஏ. டிரெய்னர் மற்றும் ஹிந்துஸ்தான் 228 ஆகிய ஹெலிகாப்டர்களும் பங்கேற்க இருப்பதாக எச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

-dt