அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஆராய விசாரணை குழுவை நீதிமன்றமே அமைக்கும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவில், மத்திய அரசு பரிந்துரைக்கும் நிபுணர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண் டன்பர்க் நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. இதை யடுத்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வெகுவாக சரிந் தது. இது பங்குச் சந்தை முதலீட் டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் அதானி குழுமத்தில் பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு குறித்தும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

4 பொதுநல வழக்கு: சமூக ஆர்வலர்களான வழக் கறிஞர்கள் 4 பேர் இது குறித்து பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரியும் நிலையில், இந்திய முதலீட்டாளர்களின் நலன்பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்த முன்னாள் நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி கூறியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. இதில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவில் இடம்பெற வேண்டிய நிபுணர்களின் பட்டியலை அளிக்க விரும்புவதாக மத்திய அரசு கூறியது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘விசாரணைக் குழுவில் இடம்பெறும் நிபுணர்களை உச்ச நீதிமன்றமே தேர்வு செய்து, முழு வெளிப்படைத்தன்மையை பராமரிக்கும். அரசு பரிந்துரைக்கும் நிபுணர்களை ஏற்றுக்கொண்டால், இந்த விசாரணைக்குழு மத்திய அரசு அமைத்த குழுவாக இருக்கும். இந்த விசாரணைக்குழு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.Set featured image

ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 

-th