இந்தியாவில் 90 லட்சம் முதியோர்கள் மறதி நோயால் பாதிப்பு

மூளையில் நரம்பணுக்கள் செயலிழந்து ஞாபக மறதி ஏற்படுவதை டிமென்ஷியா என்கின்றனர். உலகளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இந்த நோய் 7-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதன் பாதிப்பு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அமெரிக்காவை சேர்ந்தசதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தின.

இதில் இந்தியாவில் 90 லட்சம் முதியோர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய்க்கு மருந்தில்லை: இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் அபர்ஜித் பல்லவ் தேவ் கூறும்போது, ‘‘பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோ ருக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. மறதி நோய்க்கு மருந்து இல்லை. அன்பான கவனிப்பு இருக்க வேண்டும்’’ என்றார்.

 

 

-th