ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது

ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

பா.ஜனதா மாநாடு ஹாசன் மாவட்டம் பேளூரு அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜனதா செயல் வீரர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:- பா.ஜனதா கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் தங்கள் கொள்கையில் உறுதியாக இல்லை. தொண்டர்களுக்கு பா.ஜனதா உறுதுணையாக இருக்கும். இங்கு குடும்ப அரசியல் கிடையாது. பிற கட்சிகளில் குடும்ப அரசியல் உள்ளது.

அவர்கள் குடும்பம்தான் கட்சியை நடத்துகிறார்கள். ஆனால் பா.ஜனதா தனிப்பெரும் கட்சி. இங்கு தலைமைதான் முடிவு எடுக்கும். இந்தியாவில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். உலக அளவில் இந்தியாவிற்கு நல்ல பெயர் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடி. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிதி நெருக்கடி என்பது இல்லை.

2-வது இடம் ஆட்டோ மொபைல் துறையில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இரட்டை எஞ்சின் அரசு, மாநில மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்துள்ளது.

ஜல்ஜீவன், தூய்மை இந்தியா, பிரதமர் மோடியின் கிஷான் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுவோம். இதற்கு மக்கள் பா.ஜனதாவிற்கு வாக்களிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 130 இடங்களில் வெற்றி இதை தொடர்ந்து பேசிய மாநில முதல்-பசவராஜ் பொம்மை கூறியதாவது:- கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி 130 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

மக்கள் பா.ஜதாவிற்கு ஆதரவாகவுள்ளனர். ஹாசனில் பாஜனதாவிற்கு கூடுதல் இடம் கிடக்கும். இந்த மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிளை செய்து கொடுத்துள்ளோம். குறிப்பாக ரணகட்டா திட்டங்களின் கீழ் அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்பட்டது. பேளூரு, அரிசிகெரேவில் ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பேளூரு சென்ன கேசவா கோவிலுக்கு யுெனஸ்கோ சான்று கிடைந்துள்ளது. விரைவில் இந்த கோவில் சிறந்த சுற்றுலா தலமாக மாறும். காங்கிரஸ் மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

-dt