புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டு காலம், கல்வி பெறும் அடிப்படை காலம் ஆகும்.
மழலையர் கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளின் தடையற்ற கற்றல் அனுபவத்தை புதிய தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. புதுடெல்லி: குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, 5 வயது பூர்த்தியான குழந்தைகள், பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டு காலம், கல்வி பெறும் அடிப்படை காலம் ஆகும். இதில், ௩ வருட மழலையர் கல்வியும், முதல் வகுப்பும், 2-ம் வகுப்பும் அடங்கும்.
மழலையர் கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளின் தடையற்ற கற்றல் அனுபவத்தை புதிய தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அனைத்து அங்கன்வாடிகள், அரசு, அரசு உதவி பெறும் மழலையர் பள்ளிகள், தனியார் மழலையர் பள்ளிகள் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் தரமான மழலையர் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
அதைத்தொடர்ந்து, 6-வது வயதில், 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும். எனவே, புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 6 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
குழந்தைகளின் உளவியல் மற்றும் மனநல ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அவர்களை மிக இளம்வயதிலேயே பள்ளியில் சேர்க்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டய படிப்பு ஒன்றை மாநில அரசுகள் தொடங்க வேண்டும். இதற்கான பாடத்திட்டத்தை மாநில கல்வி கவுன்சிலே வகுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-mm