இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் பகுதியில் உள்ள ஆலயத்தில் இயந்திர யானையை வைத்துப் பூஜைகள் நடத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரிஞ்சடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் பூஜைகளில் உயிருடன் இருக்கும் விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.
விலங்குகளை முறையாக நடத்தும் PETA நிறுவனமும் நடிகை பார்வதி திருவோதுவும் இயந்திர யானையை ஆலயத்திற்கு நன்கொடையாய் வழங்கியதாக BBC தெரிவித்தது.
வழிபாடுகளின்போது விலங்குகளைக் கொடுமையான முறையில் நடத்தும் போக்கை இந்த முயற்சி நிறுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
3.3 மீட்டர் உயரமும் 800 கிலோகிராம் எடையும் கொண்ட இயந்திர யானை, இரும்புச் சட்டத்தால் செய்யப்பட்டது என்று Indian Express செய்தித்தாள் தெரிவித்தது.
-sm