இந்திய விமான நிறுவனங்கள் மீது 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள்

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் மீது 4,700-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் மீது மொத்தம் 4,733 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பயணிகளின் உடமைகளுக்கு ஏற்படும் சேதங்கள், பயணிகள் சேவை, ஊழியர்கள் நடத்தை, விமானத்தில் வழங்கப்படும் உணவு உள்ளிட்டவை தொடர்பாக விமான பயணிகளின் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் அதிகபட்சமாக ஏர் இந்தியா மீது 2,550 புகார்களும், இண்டிகோ மீது 853 புகார்களும், ஸ்பைஸ் ஜெட் மீது 476 புகார்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் பயணப்பெட்டிகள் தொடர்பாக 698 புகார்களும், பயணிகள் சேவை பற்றி 592 புகார்களும், ஊழியர்கள் நடத்தை பற்றி 252 புகார்களும் பதிவாகியுள்ளன. ஏர் இந்தியா மீது 2021-ம் ஆண்டில் 1,208 புகார்களும், 2022-ல் 761 புகார்களும் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 அக்டோபரில் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கிய பின்னர் புகார்கள் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

-dt