பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள் வெளியீடு

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் மோடி வருகையையொட்டி அந்த கட்டுப்பாட்டை பப்புலா நியூ கினியா அரசு தளர்த்தி உள்ளது.

இரவில் செல்லும் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார்.

 

-mm