பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பா.ஜ.க. உடன் தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு இல்லை.

சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளிதழுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பா.ஜ.க.வுக்கும், இன்றைய பா.ஜ.க.வுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதுபோல, இந்த முறையும் அதற்கான திட்டம் உண்டு. அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். பாஜக முக ஸ்டாலின்

 

-mm