கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். சக்தி திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம்கொண்டுவரப்படும். யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம்ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக் கப்பட்டது.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா கடந்த மே 20-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் வாக்குறுதிகள் உடனடியாக அமலுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற் றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 5 இலவச வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் சித்தரா மையா கூறியதாவது:
மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11-ம் தேதிமுதல் அமலுக்கு வரும். கர்நாடகாவுக்குள் சாதி, மத, மொழி பேதமில்லாமல் பெண்கள் பேருந்தில்இலவசமாக பயணிக்கலாம்.மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளில் இந்த சலுகையைப் பெற இயலாது. அதேபோல குளிர்சாதன, சொகுசுப் பேருந்துகளிலும் பயணிக்க முடியாது.
200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்படும். இந்த திட்டம் அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆரம்பமாகும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். ஜூலை 15-ம் தேதிமுதல், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும். 2022 – 2023 காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இதில் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.55 ஆயிரம் கோடி செலவாகும்.
இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
-th