எமது கடின உழைப்பாளிகள், மீனவர்கள் விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்துள்ளார். அதில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.
அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில் தொடர்புகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்குவதற்ககாகவும் நாம் செயலாற்றியுள்ளோம்.
எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டுமென்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-dt