நெதர்லாந்தில் இந்திய பெண்ணை சுற்றிவளைத்து கொடூர தாக்குதல் நடத்திய அப்பிரிக்க பெண்கள்

நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பலரது கண்டனங்களை பெற்று வருகிறது. அந்த வீடியோவில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார். அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்திய பெண்ணின் கருப்பு கைபையை ஆப்பிரிக் பெண் இழுக்க முயல்கிறார். இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில் ஆப்பிரிக்க பெண் அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கப்படுகிறார். இந்தியப் பெண்ணை கால்களால் எட்டி உதைத்தும் தாக்குகிறார்.

ஆப்பிரிக்க பெண்ணுடன் இருந்த மற்ற ஆப்பிரிக்க பெண்களும் தாக்குதலை தடுக்காமல் அவருடன் சேர்ந்து மேலும் இந்தியப் பெண்ணை தாக்கினர். அங்கிருந்த பலர் பிரச்சினையை தடுக்காமல் செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த சண்டையின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

-mm