சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நீடிக்கிறார்

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். அதன்படி வீரர்களை தங்களது அணியில் வைத்துக்கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் 2024-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

அதேபோல் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்புவார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. ஆனால் நேற்று நடைபெற்ற அறிவிப்பின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என குஜராத் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்த்தன் ஹங்கார்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்கிய ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்சனா.

விடுவிக்கப்பட் வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசான்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), டெவால்ட் பிரவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹல்வதேரா, ஜஸ்பிரீத் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்பர்ட்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ரித்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் யான்சென், ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டன், சந்தீப் வாரியர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், ரித்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்ஷன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ்,ராகுல் தெவாட்டியா, முகமது ஷமி, நூர் முகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மோஹித் சர்மா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யஷ் தயாள், கே.எஸ்.பரத், ஷிவம் மாவி, உர்வில்பட்டேல், பிரதீப் சங்வான், ஓடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசன் ஷனகா.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கே.எல்.ராகுல், குவின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, கே.கவுதம், கிருணல் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பிரேரக்மன்கட், யுத்விர் சிங், மார்க் வுட், மயங்க்யாதவ், மோஹ்சின் கான், ரவி பிஷ்னோய், யஷ் தாக்குர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டேனியல் சாம்ஸ், கருண் நாயர், ஜெய்தேவ் உனத்கட், மனன் வோரா, கரண் சர்மா, சூர்யன்ஷ் ஷெட்கே, ஸ்வப்னில் சிங், அர்பித் குலேரியா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அப்துல் சமத், எய்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹெய்ன்ரிச் கிளாசன், மயங்க் அகர்வால், அன்மோல் பிரீத் சிங், உபேந்திர யாதவ், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அபிஷேக் சர்மா, மார்க்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஸ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், டி.நடராஜன், பசல்ஹக் பரூக்கி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகில் ஹொசைன், ஆதில் ரஷித்.

கொல்கத்தா அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஸ்ரேயஸ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நைரன், ஜேசன் ராய், சுயாஷ்சர்மா, அனுக்குல் ராய், ஆந்த்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டேவிட் வீஸ், ஆர்யா தேசாய், என். ஜெகதீசன், மன்தீப்சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்குர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், டேவிட் வார்னர், பிருத்வி ஷா, அக்சர் படேல், மிட்செல் மார்ஷ், அன்ரிச் நோர்க்கியா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், லுங்கி நிகிடி, அபிஷேக் போரல், லலித் யாதவ், யஷ் தூள், பிரவீண் துபே, விக்கி ஆஸ்ட்வால், கலீல் அகமது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மணீஷ் பாண்டே, சர்பிராஸ் கான், ரிலி ரோசோவ்,ரிபல் படேல், ரோவ்மன் பாவெல், அமன் கான், பிரியம் கர்க், சேதன் சகாரியா, முஸ்டாபிசுர் ரஹ்மான், பில் சால்ட், கமலேஷ் நாகர்கோட்டி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, அவேஷ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் சென், சந்தீப் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரேல், குனால் சிங் ரத்தோர், ஜாஸ் பட்லர், டிரென்ட் போல்ட், ஆடம் ஸம்பா, ஷிம்ரன் ஹெட்மயர், டோனவன் பெரேரா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: தேவ்தத் படிக்கல், முருகன் அஸ்வின், கே.சி.கரியப்பா,கே.எம்.ஆசிப், ஆகாஷ் வசிஷ்த், அப்துல்பசித், குல்தீப் யாதவ், ஜோ ரூட், ஜேசன் ஹோல்டர், ஒபெட் மெக்காய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் ரோம்ரார், கரன் சர்மா, மனோஜ் பண்டாகே, மயங்க் தாகர், வைசாக் விஜய்குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி,ஹிமான்ஷு சர்மா, ரஜன் குமார்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜோஷ் ஹேசில்வுட், பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வேயன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவண், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிஸ்டன், சாம் கரண், சிக்கந்தர் ராசா, மேத்யூ ஷார்ட், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, நேதன் எல்லிஸ், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பாட்டியா, அதர்வா டைட், ரிஷி தவண், ஷிவம் சிங், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், குமூர் பிரார், வித்வத் காவேரப்பா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பனுகா ராஜபக்ச, மோஹித் ராத்தி, பால்டெஜ் தண்டா,ராஜ் அங்கட் பாவா, ஷாருக் கான்.

 

 

 

-ht