“ஏன் என்னை இன்னும் கைது செய்யவில்லை?” ஸ்டாலின் கேள்வி

“தெருவில் போன யாரோ கொடுத்த புகாரில், என் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த அ.தி.மு.க., அரசு, ஏன் இன்னும் என்னை கைது செய்யவில்லை,” என, மதுரையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

“ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்பேன், மின்வெட்டை போக்குவேன் என, முதல்வர் சொன்னதை நம்பி மக்களும், மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுத்தனர். ஆனால், எந்த மாற்றமும் வரவில்லை. ஏமாற்றம் மட்டுமே வந்துள்ளது. சட்டசபையில் எங்களை பேச அனுமதிப்பது இல்லை. இப்போது, ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?” என அவர் கேள்வி எழுப்புகின்றனர்.

“இந்த சவால்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த 11 மின் திட்டங்களைத் தான் இந்த அரசு இப்போது அறிவித்துள்ளது. தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்படுகிறது. எங்கள் கட்சியினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின், குற்றச்சாட்டுகளை சொல்லாமல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்கிறீர்கள். தெருவில் போன யாரோ ஒருவர் என் மீது கொடுத்த புகாரின் பேரில், என் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துவிட்டு, ஏன் இன்னும் என்னை கைது செய்யவில்லை” என்றார்.