தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகநூல் (FACEBOOK) விளங்குகிறது. இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள்,
இவர்களின் Profile Picture-ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture-ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
யார் மீதும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் முகநூலில் இணைந்த தேதியினையும், அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக் கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile-கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ என நிரப்பப்பட்டும் இருக்கும்.
அடுத்து, இவர்களுடைய Wall-ஐ பாருங்கள். Wall முழுவதும் நண்பர்களை இணைத்துக் கொண்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இணையத்தளங்கள் வைத்திருக்கும் போலி கணக்காயின் Wall முழுவதும் அவர்களின் பதிவுகள் பகிரப்பட்டிருக்கும்.
அவர்களுடைய Page Likes-ஐ பாருங்கள். எந்தவொரு Page Likes-உம் இருக்காது. அப்படி இருந்தாலும் கூட அது அவர்களின் சொந்த இணையத்தளங்களின் பக்கமாகத்தான் இருக்கும்.
போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.
ஆண்களுக்கு….! பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile-ஐ முழுவதுமாக ஆராயுங்கள்.