ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்!

லண்டன்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்கள், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து நன்மைகளையும் கிரகித்துக் கொண்டு அறிவு வளர்ச்சியில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றுவிட்டனர். இதுவரை அறிவு…

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை

பிரபஞ்ச ரகசியம் என்று ஒரு சொல் உண்டு. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது உலகம் என்று. 13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும்…

யூரோ கால்பந்து : இத்தாலி சொதப்பல்; கோப்பையை வென்றது ஸ்பெயின்!

யூரோ கோப்பையை 3-வது முறையாக வென்று ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்துள்ளது. உக்ரைனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து யூரோ கோப்பையை வென்றது. இத்தாலி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.…

நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி உள்ளது. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து…

நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி அப்டேட்!

இசைஞானி இளையராஜாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் (04.06.2012) சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. விழாவில் 'பால் நிலாப் பாதை' என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக்கொண்டர்.…

உலக சதுரங்க சாம்பியனாக மீண்டும் விஸ்வநாதன் ஆனந்த்!

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மாஸ்கோவில் புதனன்று (30.05.12) முடிவடைந்த இப் போட்டியில் டை பிரேக்கர் முறையில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார் உலகப் பட்டத்தை நிர்ணயிக்க நடைபெற்ற 12 போட்டிகள் மாஸ்கோவின் ட்ரெட்யகோவ் அரங்கில்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் உலக சாதனை!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அட்ரியன் உன்கரை தோற்கடித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டி…

அடையாளம் தெரியாமல் வேறுபெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளையால் பரபரப்பு

தமிழகத்தின் சிவகங்கை கோயிலில் நடைபெற்ற திருமணத்தின்போது தனது மணப்பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் வேறு பெண் Read More

ஐஸ்கிறீம் வாங்குவதற்காக கடற்கரையில் தரை இறங்கிய வானூர்தி!

பிரிட்டிஷ் விமானப்படைக்குச் சொந்தமான மீட்புப்பணி வானூர்தி ஒன்று பிரித்தானியக் கடற்பரப்பில் அவசரமாகத் தரையிரங்கியுள்ளது. எதற்கு என்று கேட்கின்றீர்களா? ஐஸ்கிரீம் வாங்குவதற்காக மட்டும் தான் அந்த வானூர்தி தரை இறங்கியது என்பதனை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பிரித்தானியாவில் உள்ள Winterton-on-Sea, Norfolk பகுதியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.…

இளைஞர்களை ஆட்டிப் படைக்கும் நோமொபோபியா

முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு போவார்கள். ஆனால், இன்றைய உலகில் இந்த பட்டியலில் கைத்தொலைபேசி முதலிடம் பிடித்துள்ளது.…

59வது தேசிய திரைப்பட விருது விழா : சிறந்த தமிழ்…

இந்திய தலைநகர் டெல்லியில் 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் தமிழ் நடிகர் விமல், இனியா நடித்த ‘வாகை சூடவா’ சிறந்த தமிழ் படத்துக்கான விருது பெற்றது. சிறந்த…

மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்!

கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை…

தினமும் 9 மணி நேரம் தூங்கினால் உடல் எடை குறையும்!

உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர். இதனால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும்…

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகநூல் (FACEBOOK) விளங்குகிறது. இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள், இவர்களின் Profile Picture-ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture-ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு…

செயற்கை மனித மூளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

செயற்கையாக மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கணினியை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மூளை செயல்பாடுகள் தொடர்பான நோயை தடுப்பது குறித்த ஆராய்ச்சிக்கு இந்த அரிய கண்டுபிடிப்பு உதவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா?

வழக்கத்திற்கு மாறாக, முட்டைக்குப் பதிலாக, கோழி, குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல், பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது, "கோழி முதலா அல்லது முட்டை முதலா' என்பது தான். பொதுவாக, முட்டையிட்டதும், கோழி அதன்…

பாம்பு புகுந்ததால்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஆஸ்திரேலியாவில்  நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானி அறையில் பாம்பு புகுந்ததால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று, வடக்கு பகுதியில் உள்ள பெப்பிமெனார்டி நோக்கி பறந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென, விமான கட்டுப்பாட்டு கருவிகள்…

உங்கள் சிறார்களின் இணையப் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டுமா?

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்நவீன காலத்தில் இணையம் என்பது ஒரு முக்கிய பங்களிப்பை ஆற்றுகிறது. எனினும் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும்போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் அதிகம் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்த ஆண்டு வெளியான 'Max…

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுக்கோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து…

பூனைக்கு ரிம 15 கோடியில் உயில் எழுதி வைத்த கோடீஸ்வரி

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரிம 15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார். கோடீஸ்வரரின் மனைவி மரியா அசுந்தா (94). அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் அநாதையாகத் திரிந்த கறுப்புப் பூனையை வீட்டுக்குக் கொண்டு…

டிப்ஸ்: போதையிலிருந்து விடுபட எளிய வழிகள்!

போதையால் வாழ்க்கைப் பாதை மாறியவர்களின் மனம் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தால் அந்தப் பழக்கங்களில் இருந்து மீள்வது சுலபமே. அதற்கான எளிய வழிகள் இங்கே... * போதை தீமையானது என்பதை முதலில் உணருங்கள். அதனால் உங்கள் குடும்ப நிலை பாதிக்கப்பட்டிருப்பதை சிந்தித்துப் பாருங்கள். பிறகு "நான்…