பாலியல் ‌பேராசிரியர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து அஞ்சலி

தமிழகத்தின் நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் படத்தை வைத்து செருப்பு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி மாணவிகள் நூதன போரட்டம் நடத்தினர்.

நெல்லை பல்க‌‌லைக்கழக பேராசிரியர் செல்லமணி (வயது 51) மீது பாலியல் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை ‌கோரி கடந்த மூன்று நாட்களாக அப்பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 4-வது நாள் போராட்டம் நடக்கிறது. அதிகாரிகள் யாரும் பேச்சுவார்‌த்தைக்கு வராத நிலையில். மாணவிகள் இன்று பேராசிரியரின் உருவப் படத்தைவைத்து, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி மாணவிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.