கருணாநிதியின் கோரிக்கையை நிராகரித்த இந்திய மத்திய அரசு

இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் முன்னாள்  முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை, இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் எனவும், இதற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கருணாநிதி கோரி இருந்தார்.

இது தொடர்பில் தமிழீழ ஆதரவாளர்களின் மாநாடு ஒன்றையும் கடந்த திங்கட்கிழமை சென்னையில் அவர் தலைமையில் நடைபெற்றது.

எனினும் கருணாநிதியின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் ஜீ.கே.வாசன், இலங்கை தமிழர் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உயர்ந்தபட்ச ஆதரவினை வெளிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில்; முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.