அமைச்சர் விழாவில் அதிமுக-திமுக மோதல்!

கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் பகுதியில் கோயில் விழா ஒன்றில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அன்னாதானத்தை துவக்கி வைத்து வைத்து பேசிய அமைச்சர் சுந்தர்ராஜ், இது போன்ற அன்னதானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அனைத்து கோயில்களிலும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதற்கு திமுக வைச் சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக-வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் காணப்பட்டது. அமைச்சர் சுந்தர்ராஜை பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர்.