ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல் ?

ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல்? எத்தனை தமிழன் இந்த புரட்சி தமிழச்சியின் உரிமைக்காக குரல் குடுக்க தயராக இருகிறீர்கள் ?

அம்பிகா ஒருவரால் மட்டுமே பெர்சே வழி நடத்தப்படுகிறதா, ஏன் அம்பிகாவை மட்டும் குறி வைத்து தாக்க நினைகிறார்கள் ? அவர் ஒரு தமிழச்சி என்பதனாலா ?

ஜாதி வெறி புடிச்ச வெறியர்கள் ஒரு சைவ உணவு பழக்கம் உள்ள ஒரு இந்து வீட்டு முன்பு மாட்டு இறைச்சி பெர்கர் விற்கிறான், ஒவ்வொரு இந்துவுக்கும் துடிக்க வில்லையா ? மலேசியா இந்து சங்கம் ? இந்திய மக்களின் காவலன் என்று மார் தட்டிகொள்ளும் மஇகா, மலேசியாவில் இருக்கும் இந்திய சமய அறிஞர்கள் என்ன செய்து கொண்டு இருகிறார்கள் ?

மஇகா இளைஞர் பகுதி தேவை இல்லாது எல்லாத்துக்கும் மூக்கை நுளைக்கிறீர்கள், ஒரு தமிழ் பெண்ணின் வீட்டு முன்பு அருவருப்பான உடற்பயிற்சி , மாட்டு இறைச்சி பெர்கர் விற்கிறான், தமிழன்தானே நாமெல்லாம் எங்கே நமது குரல், எங்கே தமிழனின் ஒற்றுமை, அரசியல் கருத்து வேறுபாடு, அம்பிகாவின் செயல்பாட்டில் ஒரு சிலருக்கு புடிக்காமல் இருக்காலம், ஆனால், இந்து சமயத்துக்கு எதிராக நடக்கும் அநியாயத்தை பார்த்து எந்த இந்துவும் சும்மா இருக்க மாட்டான்.

மலேசியா இந்திய மகளிர் அமைப்புகளே ! ஒரு இந்திய பெண்ணின் வீட்டு முன்பு ஆபாசம் உடற்பயிற்சி செய்த கயவர்கள் மீது உங்களுக்கு வர வில்லையா கோபம்?

மகளிருக்காக போராடுகிறோம் என்று சொல்கிறீர்களே ! அம்பிகாவும் ஒரு மகளிர்தனே? இல்லை அரசியல் சாயம் பூசி யாரோ எப்படி போனா எனக்கு என்னான்னு சும்மா இருக்க முடியுமா ?

அனைத்து கட்சி மகளிர்களே ? அரசியல் சாயம் பூசாமல் அம்பிகாவுக்கு எதிராகவும் இந்து சமயத்துக்கு எதிராகவும் நடந்த கயவர்களுக்கு எதிராக பொங்கி எழுங்கள்.

இண்டாரப் அன்பர்களே இந்தியர்களுக்கு குரல் கொடுக்குறோம் இந்து சமயம் வாழ்க என கோசம் போட்டால் மட்டும் நமது கடமை முடிந்து விடாது, இது அம்பிகாவை குறி வைத்து தொடுக்கப்படும் தொல்லைகளுக்கு எதிராகவும், இந்து சமயத்துக்கு எதிராக மாட்டு இறைச்சி விற்ற கயவர்களுக்கு எதிராகவும் இந்தியன் எனும் உணர்வோடு பொங்கி எழுங்கள்.

-vel murugan desa mentari pj