ஈழத் தமிழர் குறித்து கருணாநிதி ஆடுவது நாடகம்!

இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் உதவுவதாக கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது இந்திய மத்திய அரசும், அப்போதைய முதல்வர் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று தனி ஈழம் அமைக்கப் போவதாக டெசோ என்ற அமைப்பை உருவாக்கி கருணாநிதி நாடகமாடி வருகிறார்.

இந்தியாவில் இருந்து தான் இலங்கைக்கு ஆயுதங்கள் சென்றன. இராணுவ வீரர்கள் சென்றனர். இலங்கையில் ஒரே இடத்தில்40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து குரல் கொடுத்ததோடு மட்டும் அல்லாது தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. இவ்வாறு பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

TAGS: