இலங்கையில் திட்டமிட்ட வகையில் தொடரும் இனப்படுகொலைகளை தடுக்க இந்தியா என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி. ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
இந்துக் கோயில்கள் இலங்கையில் தாக்கப்படுகின்றன. வடகிழக்கு தாயகப் பூமியில் இருந்து தமிழர்களை அகற்றும் முயற்சிகள் சிங்கள அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கில் மாத்திரம் 60 வீதமான இலங்கைப் படையினர் நிலைகொண்டுள்ளனர். இது வடகிழக்கில் வாழும் தமிழர்களில் நான்கில் ஒரு வீதமாகும்.
இந்நிலையில் இந்த விடயங்களில் இந்தியா என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது; அதற்கான நடவடிக்கை என்ன என்று ராஜா கேள்வி எழுப்பினார்.
அனைத்துலகத்தின் கோரிக்கைகளை நிராகரித்து வரும் இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மத்தியில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் மறுத்து வருகிறது என்று அவர் மேலும் குற்றம்சாட்டினார்.