பாலியல் தொழிலில் ஈடுபட்ட கோலங்கள் துணை இயக்குநர் கைது

சென்னையில் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம்பெண்கள் பணம் சம்பாதிக்க பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் வாடிக்கையாளர் போல தொடர்புகொண்டதில் வடபழனி சரவணபவன் ஹோட்டல் அருகில் வந்தால் பெண்ணை அழைத்துச் செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறயைினர் மாறுவேடத்தில் அங்குசென்றபோது சென்னை போரூரைச் சேர்ந்த அன்பு என்பவர் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவந்திருந்த இளம்பெண் ஒருவர் இருந்தார். அவரை காவல்துறையினர் மீட்டனர்.

அன்புவை கைது செய்து விசாரித்தபோது சின்னத்திரையில் கோலங்கள் உள்ளிட்ட தொடர் நாடகங்களில் துணை இயக்குநராகவும் மேடைக் கச்சேரிகளில் நடன இயக்குநராகவும் பணியாற்றியதாக காவல்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.