ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது

தனது பேச்சைக் கேட்காமல், ஆபாசமான உடைகளை அணிந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (வயது 37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளர். குல்பீரின் மனைவி கவுர் பல்விந்தே (வயது 27). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுர் பல்விந்தே திடீரென மாயமானார். அதனையடுத்து கவுரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

குல்பிரிடம் கேட்ட போது, தன்னுடன் வாழப் பிடிக்காமல் கவுர் பிரிந்து சென்று விட்டதாக கூறினார். இந்நிலையில், கவுரின் சடலம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், தனது மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.

காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மனைவி கவுருக்கு இந்திய பாரம்பரிய ஆடைகள் பிடிக்கவில்லை. அவர் ஆபாசமான மேற்கத்திய பாணி உடைகளையே அணிந்தார். அது எனக்கு பிடிக்காததால் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

பிடிவாதமாக அதையே அணிந்து வந்தார். இது என் கோபத்தை அதிகரித்தது. அதனால் அவரைக் கொலை செய்தேன் என்று குல்பீர் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.