கருணாநிதிக்கு பண மாலை, கிரீடம்…! இதைவிட கொடுமை வேறேதும் உண்டோ?

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதனை தடுக்க உண்ணாநோன்பு நாடகத்தை அற்புதாக அரங்கேற்றி தனது துரோகத்தனத்தை உலகத்தமிழர்களுக்கு பறைசாற்றிய பெருமையைக் கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று தனது 89-ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

கருணாநிதியின் 89 வதுபிறந்த நாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் நேற்று திமுக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர்.

அறிவாலயத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம் முழங்க கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நீண்ட வரிசையில் கட்சியினர் நின்று கொண்டு கருணாநிதிக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதிக்கு பண மாலை, கிரீடம்!

கருணாநிதிக்கு பனை ஓலை, மலர் கிரீடங்கள், ஆயிரம் இந்திய ரூபாய், 500 ரூபாய் பணத் தாள்களால் தொடுக்கப்பட்ட மாலைகள், பண கிரீடம், 89 வகையான சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவற்றை பரிசாக வழங்கி, தொண்டர்கள் தங்கள் தலைவரை குஷிப்படுத்தி மகிழ்ச்சியடைந்தனர்.

தனது பிறந்தநாளை ஒட்டி நிருபர்களிடம் பேசிய கருணாநிதி…

“தி.மு.க., அன்றும் இன்றும் எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டால், அந்த கூட்டணிக் கட்சியை எதிர்க்கும். மறைந்த இந்திய தலைமையமைச்சர் இந்திரா காந்தியை ஆதரித்த காலத்தில், மிசா சட்டம் கொண்டு வந்ததால் எதிர்த்தோம்.

பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அக்கட்சி செயல்பட்டதால், கூட்டணியில் இருந்து விலகினோம். இப்போது, காங்கிரஸ் கட்சி பெட்ரோல் விலையை உயர்த்தியதை எதிர்த்து குரல் கொடுத்தோம். குறைத்த பின் அமைதியானோம். இருப்பினும், குறைத்தது போதாது என்றார்.

“அதை செய்தோம் இதை செய்தோம் என்று வாய் நிறைய பேசும் இந்த துரோகி கருணாநிதி, ஈழத்தில் சொந்த இனம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது என்ன செய்தார் என்பது யாவரும் அறிந்ததே. தமிழர் படுகொலைக்கு துணைபோன காங்கிரஸ் கூட்டணியுடன் தனது பதவிக்காக உறவுகொண்டாடியதை தமிழர்களால் எப்படி மறக்கமுடியும். இலங்கை தமிழர்கள் சோக அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள் கருணாநிநிதிக்கு இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா? எதுஎவ்வாறாயினும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்த கருணாநிதிக்கு கடவுள் சீக்கிரம் தண்டனை கொடுப்பார்” என்கிறார் தமிழ் உணர்வாளர் பாலன்.

TAGS: