தி.மு.க.,வினரை அடைக்க வெளிமாநில சிறைகள் தயாராகுது!

தமிழகத்தில் தி.மு.க-வினர் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை சமாளிக்க, காவல்துறையினர் முழு வீச்சில் தயாராகி விட்டனர்.

தமிழக சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், வெளிமாநில சிறைகளில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை, காவல்துறையினர் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகிகள், சிறைக்குச் செல்வதும் வருவதுமாக உள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த தி.மு.க.,வினர் சிலர், காவல்துறையினரின் கண்ணில் படாமல் அடக்கி வாசிக்கின்றனர்.

மாஜிக்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்டம், வட்டம், ஒன்றிய செயலர்களுக்கும் அவர்கள் பங்கிற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: