ஒபாமா கருத்துக்கு இந்திய எதிர்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் நிலோட்பால் பாசு, நமது பொருளாதாரம் மற்றும் சந்தையை திறந்து விட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதற்காக அமெரிக்க நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

தற்போது உள்ள நிலையில் உலகம் முழுவதும் முதலீட்டிற்கான நிலை மாறும் என யாரும்நம்பவில்லை என கூறினார். ஒபாமா கருத்து குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.,வின் தருண் விஜய், “ஒபாமாவின் கருத்து நகைப்புக்குரியது. அமெரிக்கா பொருளாதார சிக்கல்கள சந்தித்து வரும்நிலையில், நமக்க சான்றிதழ் தருகிறது. நமது தேசிய நலனை நாம் தான் உறுதி செய்ய வேண்டும். அன்னிய முதலீட்டிற்கு எதிராக போராட நமக்கு உரிமை உள்ளது” என கூறினார்.

TAGS: