தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து சிங்கள இராணுவத்தினர் இடமாற்றம்!

தமிழகம்: தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து குன்னூரில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு இலங்கை இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு கருதி வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குன்னூரில் நடைபெறும் இராணுவ பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள 10 நாடுகளிலிருந்து இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர்.

முகாமில் பங்கேற்க வந்துள்ள இலங்கை அதிகாரிகளுக்கு பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குன்னூரில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

TAGS: