ராஜபக்சே வருகையை எதிர்த்து தீக்குளித்த தமிழ் உணர்வாளர் மரணம்!

இலங்கை ஜனாதிபதியும் தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் திங்கட்கிழமை தீக்குளித்த தமிழ் உணர்வாளர் விஜயராஜ் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

“இந்தியாவுக்கு ராஜபக்சே வருவதைத் தமிழர்கள் தடுக்க வேண்டும்” என்று முழக்கமிட்டவாறே திங்கட்கிழமை காலை சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் விஜயராஜ். உடலில் 80 சதம் தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

தியாகி விஜயராஜ் மரண படுகையின்போது கூறிய இறுதி வரிகள் : “தமிழர்களை கொன்னு குவித்த கொலைகார பாவி ராஜபக்சே இந்திய தேசத்திக்குள் வரக்கூடாது மிறீ வந்தால் அவனை தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்டவேண்டும். அவன் இந்தியாவுக்குள் கால்வைச்சிட்டு திரும்பி போனால் அதைவிட பெருத்த அவமானம் தமிழர்களுக்கு வேறதுவும் கிடையாது. நான் தமிழுக்காவும், தமிழர்களுக்காகவும் எனது உயிரை மாய்த்துக்கொள்வதில் பெருமையடைகிறேன்.”

இதனிடையே, விஜயராஜ் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான் விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று அவரது உறவினர்களும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சே எதிர்வரும் செப்டம்பர் 21ம் நாள் இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் புத்த மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார். அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தின் பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

ராஜபக்சேவை எதிர்த்து நேரடியாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது பெருமளவான ஆதரவாளர்களுடன் சாஞ்சி நோக்கி 21 பேருந்துகளில் புறப்பட்டுள்ளார்.

TAGS: