தமிழகத்தில் விடுதலைப் புலிகளா? இந்திய இராணுவ அமைச்சர் பதில்

புதுடில்லி: “தமிழகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்திய இராணுவ அமைச்சர் அந்தோணி, “இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்றார்.

இந்திய இராணுவ கணக்கு துறை ஆண்டு விழா டில்லியில் நேற்று நடைபெற்றது. அதில் இந்திய இராணுவ துறை அமைச்சர் அந்தோணி கலந்துகொண்டபின்னர் நிருபர்களுக்கு பதிலளித்தார்.

இதனிடையே, தமிழீழ தனிநாட்டையும் தமிழகத்தையும் இணைத்து ஒரு பரந்த  தமிழ்நாட்டை தோற்றுவிக்க விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த  ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தது. குறித்த அறிக்கையில் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி அமைப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: