இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

புதுடெல்லி : இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என்று போபர்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வீழ்ச்சி காணப்படுகிறது. என்றாலும் முகேஷ் அம்பானி 5-வது ஆண்டாக இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சகோதரர் அனில் அம்பானி முதல் 10 இடத்துக்குள் கூட வர முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலகளாவிய ஸ்டீல் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் லட்சுமி மிட்டல் 16 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். 12 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பலோன்ஜி மிஸ்ட்ரி (9.8 பில்லியன் டாலர்) திலீப் சங்வி (9.2 பில்லியன் டாலர்) அதி கோத்ரஜ் (9 பில்லியன் டாலர்) சாவித்தரி ஜின்டல் (8.2 பில்லியன் டாலர்) சசி அன்ட் ரவி ரூயா (8.1 பில்லியன் டாலர்) இந்துஜா சகோதரர்கள் (8பில்லியன் டாலர்) குமார் மங்களம் பிர்லா (7.8 பில்லியன் டாலர்) ஆகியோர் இந்திய பணக்காரர்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.