பர்மிய எதிர்க்கட்சித் தலைவியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி, ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியத் தலைநகர் டில்லிக்கு வந்திருக்கிறார். புதன்கிழமையன்று அவர்நேரு நினைவு உரையாற்றுகிறார். அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்துப்பேசுகிறார்.
இந்தியா, பர்மிய இராணுவ அரசாங்கத்துடன் உறவாட 1990-களில் முடிவெடுத்த பின்னர், இந்திய அரசுக்கும், ஆங் சான் சூச்சிக்கும் இடையே இருந்த உறவில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய இந்த பயணம் ஒரு சந்தர்ப்பம் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
1960-களில் ஆங் சான் சூச்சி இந்தியாவில் வாழ்ந்தவர். அப்போது அவரது தாயார், இந்தியாவில் பர்மியத் தூதராக இருந்தார்.
இந்தியாவும், பர்மா வெளிநாட்டு முதலீடுகளுக்கு தனது பொருளாதாரத்தைத் திறந்து விடும் நிலையில், பர்மாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த ஆர்வமாக இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.