மாணவி கற்பழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; ஜனாதிபதி மாளிகை முற்றுகை

IndiaGangRape01புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த வாரத்தில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் இரவில் மருத்துவ மாணவியை கற்பழித்தனர். இதில் மாணவி சுயநினைவு இழந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கற்பழிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று டில்லியில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

IndiaGangRapeஇந்நிலையில் இன்று டில்லி மாணவிகள் மற்றும் மகளிரணியினர் ஜனாதிபதி பிரணாப் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தடுத்தும் பெண்கள் ஜனாதிபதி மாளிகை அருகே சென்று கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் இங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அதிகாரிகள் மற்றும் முக்கிஸ்தர்கள் காரை மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TAGS: