அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் மதிமுகவின் இலக்கு என்கிறார் வைகோ

vaikoசென்னை: தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் மதிமுகவின் இலக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மத்திய பிரதேசம் மாநிலம் சாஞ்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதிமுக சார்பில் பூந்தமல்லியில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

நடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரலாம். முழுமையான பதவிக்காலம் முடிந்த பிறகும் தேர்தல் வரலாம். எங்களுக்கு எந்த ஒரு சுய நலமும் இல்லை. ஆனால் அதிகாரம் தேவைப்படுகிறது. ஆகவேதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் எங்களுக்கு ஒரு இலக்கு இருக்கும் என்று சொன்னால் அது தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதேயாகும். அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ள மகத்தான கூட்டம் தான் இது. இதிலே உறுதி எடுத்து கொள்வோம். முன்னேறி செல்வோம். அதிகாரத்தை கைப்பற்றுவோம். அதை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் உறை கல்லாக இருக்கும். அதை பொதுக்குழுவில் அறிவிப்போம் என்றார்.

டெல்லயில் ஓடும் பேருந்தில் மருத்தவ மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். தூக்கில் போட வேண்டும். அவர்களின் ஆண்மையை அழிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் வந்த பிறகும் டெல்லியில் பல்லாயிரக்கனக்கானோர் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிறகும் இளம் பெண் நாசம் செய்யப்பட்டுள்ளார். கிளர்ச்சி செய்ய வந்த இடத்தில் இளம் பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

TAGS: