தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாக இலங்கை தமிழர் கைது

q branceதடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாகக் கூறி இலங்கை தமிழர் ஒருவரை தமிழக காவல்துறையினர் திருச்சியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் தூவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டையில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இதன் அருகே ஆசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (45). இலங்கை தமிழரான இவரிடம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட செய்மதி தொலைபேசி (சேட்டிலைட் போன்) இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் ராமச்சந்திரன்ல இந்தியாவில் தடை செய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்தது உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, திருச்சி ஜே.எம். 6 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி நர்கீஸ் பானு, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா அல்லது வேறு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

TAGS: