இலங்கை கடற்படை அட்டூழியம் என மீண்டும் குற்றச்சாட்டு

indian_fishersதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்தியதாக இந்திய ஊடகங்கள் வாயிலாக மீண்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஜெயசந்திரன் (வயது 34), மாரிமுத்து (45), அர்ச்சுனன் (52), முத்துக்குமார் (26), சேகர் (55), முருகன் (35) ஆகிய 6 பேர் படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

இரவு நேரத்தில் அவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி சென்றுவிட்டதாக கரைக்கு திரும்பி கொண்டிருந்த அவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்தனர்.

மீனவர்களின் படகுகளில் ஏறி சோதனைசெய்து ஒரு படகின் அனுமதி புத்தகத்தை (பாஸ்புக்) பறிமுதல் செய்ததுடன் படகுகளுடன் இணைக்கப்பட்டிருந்த வலைகளை அறுத்து எறிந்தனர்.

அத்துடன் எல்லை தாண்டி வந்திருப்பதாக மீனவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு போய்விட்டதாக தெரிகிறது. வலைகள் அறுக்கப்பட்டதால் வெறும் கையுடன் கரைதிரும்பிய மீனவர்கள் சார்பாக படகின் உரிமையாளர் மல்லிப்பட்டினம் ரபீக்கான் சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை பொலிஸில் இதுபற்றி புகார் செய்தார்.

நக்கீரன்

TAGS: