அரச அதிகாரிகள், முஸ்லீம் குழுக்கள் மற்றும் கமல்ஹாசன் தரப்பினரிடையே நடந்த 6 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் ஊடகங்களுடன் பேசியுள்ளார்.
சில ஒலிக் குறிப்புக்களை நீக்க தான் ஒப்புக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.
பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர உதவிய தமிழக முதல்வருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசு படத்தை வெளியிட விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து தாம் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்த கமல், அரசும் தடையை திரும்பப் பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
படம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.