இந்தியாவில் தேவையற்ற கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள்

jairamஇந்தியாவில், அறுவை சிகிச்சைகளிலிருந்து மேலும் கூடுதலாக பணம் பண்ணுவதற்காக, மோசடி டாக்டர்கள் , பெண் நோயாளிகளின் உடலிலிருந்து கர்ப்பப் பைகளை தேவையற்ற நிலையிலும் அகற்றிவிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இது போல கர்ப்பப்பைகள் அகற்றப்பட்ட சில பெண்கள் பிபிசியிடம் பேசுகையில், இது போல கர்ப்பப்பை அகற்றப்படாவிட்டால், அவர்களுக்கு புற்று நோய் வந்துவிடும் என்று தனியார் மருத்துவமனைகள் அவர்களை எச்சரித்ததாகக் கூறினர்.

அரசு வழங்கும் மருத்து உதவித் திட்டம் நெருக்கடியில் வீழ்ந்துவிட்ட நிலையில், அந்த இடைவெளியை நிரப்ப தனியார் மருத்துவமனைகள் நுழைந்திருப்பதாக இந்தியாவின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தேவையற்ற மருத்துவ சிகிச்சை நடைமுறைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க மேலும் அதிகம் செய்யப்படவேண்டியிருக்கிறது என்று அரசு ஒப்புக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

-BBC

TAGS: