காஷ்மீர் : பெண்கள் இசைக்குழுவை மிரட்டியவர்கள் கைது

pragaash_girl_band_kashmirஇந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் முழுவதும் பெண்களைக் கொண்ட றொக் இசைக்குழுவைப் பற்றி இணையத்தில் மிரட்டும் கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

இரு மாதங்களுக்கு முன்னதாக ஒரு இசை விழாவில் தாம் நேரடி நிகழ்ச்சி நடத்தியதை அடுத்து, தமக்கு இணையத்தில் வெறுப்பைக் கக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதுடன், தாம் மிகவும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாவதாக ”பிரகாஷ்” என்னும் அந்த இசைக்குழுவின் மூன்று பதின்ம வயதுப் பெண்கள் கூறியுள்ளனர்.

முக்கிய இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவரது விமர்சனத்தை அடுத்து தாம் தமது இசைக்குழுவைக் கலைப்பதாக இந்த வார முற்பகுதியில் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இசைக்குழுவை முஸ்லிம் பெண்கள் நடத்துவது அநாகரிகமானது என்று அந்த மதத் தலைவர் கூறுகிறார். ஆனால், தமது குழு இஸ்லாத்துக்கு முரணானது அல்ல என்று அந்தப் பெண்கள் கூறுகிறார்கள்.

TAGS: