ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பஞ்சாப் அரசியல் கட்சி

panjabஇந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டப் போரின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு தமிழ் மக்கள் பிரச்னை அல்ல எனவும் மனிதாபிமான பிரச்னை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி வலியுறுத்தியுள்ளார்.

TAGS: