கோல்கட்டா: கோல்கட்டாவின் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கோல்கட்டாவின் சீல்டாக் பகுதியில் சூர்யாசென் என்ற பெயரில் மார்க்கெட் மற்றும் கோடவுன் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை பலர் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3.50 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெண்களும் அடக்கம். சம்பவ இடத்திலிருந்து 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் என்ஆர்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.