புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம் – மாணவர்களை மிரட்டிய போலிஸ்

salem eelam‘இலங்கையில் நடந்தது இன படுகொலையே… ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி ‘எவனோ எங்கயோ செத்தான்னா இங்க எதுக்கு போராடுறீங்க’ என  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மாணவர்களோ ‘இது எங்கள் உணர்வு நாங்கள் மானமும் ஈரமும் வீரமும் உள்ள தமிழச்சிக்கு பிறந்தோம். அதனால் இந்த போராட்டம் செய்கிறோம்.  மானம் உள்ளவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்’ என பதிலடி தந்து  கல்லூரி உள்ளேயே பாய் படுக்கை எடுத்து வந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் கோபமான முதல்வர் காவல்துறைக்கு பேசி அவர்களை வரவழைத்தார். மாணவர்களில் ஒரு பிரிவினர் தொடர் காலைவரையற்ற உண்ணாவிரதத்திற்கு தயாராகினர். மாலை ஆக ஆக அங்கே குவிந்த காவல்துறை மாணவர்களை மிரட்ட ஆரம்பித்தது.

கல்லூரி முதல்வர் அனைத்து மாணவர்களின் பெயர்களையும், ரோல் நம்பரையும் எழுதி வாங்கிகொண்டு உங்களை எல்லாம் கல்லூரியை விட்டே டிஸ்மிஸ் செய்ய போகிறேன் என மிரட்டி வந்தார்.

நடந்தவைகளை மாணவர்கள் சார்பாக விவரிக்கின்றனர் மாணவர்கள் வினோத் மற்றும் வேல்முருகன்…

‘நீங்க படிக்க வந்துருக்கிங்களா இல்லை இப்படி தண்ட சோறு மாதிரி போராட வந்தீங்களா? எங்கயோ எவனோ செத்தா உங்களுக்கு இங்க போராட்டம் உங்க எல்லா போரையும் கொடுங்க டிஸ்மிஸ் செய்றேன் என கல்லூரி முதல்வர் மிரட்டினாரு… உளவுப்பிரிவோ காலையில் இருந்து ‘நீங்க போராடினீங்கண்ணா உங்களை விடுதலை புலிகள்னு உள்ள தள்ளிடுவோம், உங்க எதிர்காலமே போயிடும் அரசு வேலை கிடைக்காது காலத்துக்கும் கோர்ட்டுக்கும் போலிஸ் ச்டேசனுக்கும் நடையா நடந்துகிட்டே இருக்கணும்’னு பயமுறுத்தி வந்தாங்க… காவல்துறையோ ‘உங்க எல்லோரையும் தூக்கி உள்ள போட்டுடுவோம் சிறையில கலி திங்கணும்னு’ மிரட்டினாங்க இதுல தான் எங்கள் உள்ளிருப்பு போராட்டம் கொஞ்சம் தொய்வு அடைந்தது ஆனாலும் மாலை வரை நடத்திட்டோம்.

நாங்க தமிழர்கள் எங்களுக்குள் ஈரம் இருக்கு. அதைவிட வீரம் இருக்கு… அங்கே லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்தது காவல்துறை. இன்று தமிழகமே மாணவ போராட்டங்களாய் கொந்தளித்து கொண்டுள்ளது. இந்த காவல்துறை அராஜகம் ஒழிய வேண்டும். எங்களை டிஸ்மிஸ் செய்வதா மிரட்டுறார் முதல்வர்,  நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் எங்கள் உணர்வை காட்டுவோம். நாளையில் இருந்து உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்’ என்றனர் உணர்வோடு.

தமிழகம் முழுக்க நடக்கும் மாணவர்கள் போராட்டங்களில் சேலமும் இனைந்து கொண்டது.

TAGS: