அதிபர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முடிவு!

students_tamilnaduஇலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, சாலைமறியல், முற்றுகை என பல்வேறு அறவழிகளிலும் கடந்த 20 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு எந்தவொரு அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய மிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன்;

ராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை துணைத் தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கை தொடர்பாக இந்திய அரசு வரும் 31-ந்தேதிக்குள் தன்னுடைய கருத்தை வெளியிட வேண்டும்.

தவறினால் தமிழ் இனப்படுகொலைக்கு துணைபோன முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி இருக்கும் டெல்லி ஜனாதிபதி மாளிகையை ஏப்ரல் முதல் வாரத்தில், அகில இந்திய அளவில் மாணவர்கள் ஒன்று கூடி முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் போராட்டம் அகில இந்திய அளவில் பரவ உள்ளது.

இதற்காக குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநில மாணவர்களையும் ஒன்று திரட்டி வருகிறோம். இதன் மூலம் போராட்டம் அடுத்த கட்டமாக அகில இந்திய அளவில் பரவ உள்ளது என்றார்.

இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, சாலைமறியல், முற்றுகை என பல்வேறு அறவழிகளிலும் கடந்த 20 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு எந்தவொரு அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை.

TAGS: